11 இந்திய மீன்பிடி படகுகள் சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைவதை கடற்படையால் தடுக்கப்பட்டது

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இலங்கை கடலுக்குள் நுழைவதைத் தடுக்க கடற்படை வடக்கு கடல் பகுதியில் சிறப்பு ரோந்துப் பணிகள் மேற்கொள்வதன் மூலம், சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைய முயச்சித்ததாக சந்தேகப்படுகின்ற 86 நபர்களுடன் 11 இந்திய மீன்பிடிக் படகுகளை இலங்கை கடலுக்குள் நுழைவதைத் தடுக்க இன்று (2021 மே 04) கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

சட்டவிரோத குடியேறியவர்கள் கடல் வழியாக இலங்கைக்கு நுழைவதால் நாட்டில் கோவிட் 19 தொற்றுநோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதுடன் 24 மணி நேர ரோந்துப் பணிகளை அதிகரிப்பதன் மூலம் வடமேற்கு மற்றும் வடக்கு கடல் பகுதிகளில் கடற்படை பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது. அதன் படி மன்னாருக்கு தெற்கு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள இந்த சிறப்பு ரோந்துப் நடவடிக்கையின் போது, இலங்கை கடல் பகுதிக்குள் நுழைய முயன்றதாக சந்தேகிக்கப்படும் 11 இந்திய மீன்பிடிக் படகுகள் கடற்படை ரோந்து நடவடிக்கைகள் மூலம் இலங்கை கடலுக்குள் நுழைவதைத் தடுக்க முடிந்தது.

இது குறித்து இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் அளிக்கப்பட்டு 11 இந்திய மீன்பிடிக் படகுகளையும் 86 நபர்களையும் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கடல் வழியாக நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க கடற்படை தொடர்ந்து வடமேற்கு மற்றும் வடக்கு கடல் பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.