கேரள கஞ்சா கொண்ட ஒருவர் கடற்படையின் உதவியுடன் கைது

இலங்கை கடற்படை 2021 மே 20 ஆம் திகதி மன்னார் பகுதியில் சிறப்புத் தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொண்டதுடன், அப்பொது விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்ட சுமார் 01 கிலோ மற்றும் 450 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபர் (01) கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதில் கடற்படை தொடர்ந்து விழிப்புடன் உள்ளது. அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மன்னார் பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து 2021 மே 20 ஆம் திகதி மன்னார் சைட் சிட்டி பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்ட சுமார் 01 கிலோ மற்றும் 450 கிராம் கேரள கஞ்சாவுடன் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

‍கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 21 வயதான மன்னார் செல்வ நகர் பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டார். குறித்த சந்தேக நபர் மற்றும் கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.