“ரூ .14 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது” என்ற தலைப்பின் கீழ் 2021 மே 31 அன்று வெளியிடப்பட்ட செய்தி வெளியீடுயுடன் தொடர்பானது

2021 மே 30 ஆம் திகதி பருத்தித்துறை கோட்டாடி கடற்கரை பகுதியில் நடத்திய சிறப்பு ரோந்துப் நடவடிக்கையின் போது, சுமார் 48 கிலோ மற்றும் 900 கிராம் கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன் இன்று (2021 மே 30) இப்பகுதியில் மேற்கொண்ட மற்றொரு தேடுதல் நடவடிக்கையின் போது மேலும், 31 கிலோ மற்றும் 835 கிராம் எடையுள்ள கேரள கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.

அதன்படி, இன்று (2021 மே 31) வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் கோட்டாடி கடற்கரை பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, மூடப்பட்ட ஒரு கட்டிடத்தின் பின்னால் இரண்டு பாலிதீன் பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 31 கிலோ மற்றும் 835 கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டது. முந்தைய நாள் கடற்படை நடத்திய சிறப்பு இரவு ரோந்து நடவடிக்கையின் காரணமாக கடத்தல்காரர்கள் இந்த கேரள கஞ்சாவை இந்த இடத்திலேயே விட்டு பின்னர் அதை திரும்பப் பெறலாம் என்று வெளியேறிவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், இந்த கேரள கஞ்சாவின் தெரு மதிப்பு சுமார் ரூ 09 மில்லியன் என்று நம்பப்படுகிறது.

கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

அதன்படி, கடற்படை மேற்கொண்ட முழு நடவடிக்கை மூலம் சுமார் ரூ 24 மில்லியன் பெருமதியான சுமார் 80 கிலோ மற்றும் 735 கிராம் கேரள கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.