நடவடிக்கை செய்தி

பாதிக்கப்பட்ட மீன்பிடிப் படகொன்றில் இருந்த மீனவர்களை மீட்க கடற்படை பங்களிப்பு

இலங்கைக்கு தெற்கு கடல் பகுதியில் பாதிக்கப்பட்ட மீன்பிடிப் படகொன்றில் இருந்த மீனவர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வர இன்று (2021 ஜூன் 02) கடற்படை உதவி வழங்கியது.

02 Jun 2021

தீ பிடித்த MV X-PRESS PEARL கப்பலினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய கடற்படை பங்களிப்பு

இலங்கை கடற்படை நீர்நிலை பிரிவினால் இயக்கப்படும் தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமைக்கு (NARA) சொந்தமான சமுத்ரிகா (RV SAMUDRIKA) ஆராய்ச்சி கப்பல் MV X-PRESS PEARL கப்பலின் தீ விபத்து மூலம் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 2021 ஜூன் 01 ஆம் திகதி பாதிக்கப்பட்ட கப்பல் உள்ள கடல் பகுதியில் கடல் நீர் மாதிரிகள் சேகரித்துள்ளது.

02 Jun 2021

ரூ .30 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான மற்றொரு கேரள கஞ்சா பொதியுடன் சந்தேக நபர் ஒருவர் கடற்படையினரால் கைது

இன்று (2021 ஜூன் 01) காலை மாதகல் மாசன்குடா கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு ரோந்துப் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 101 கிலோ மற்றும் 700 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு டிங்கி படகு மற்றும் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

02 Jun 2021

ரூ .08 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 02 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

2021 ஜூன் 01 ஆம் திகதி மன்னாருக்கு வடக்கு கடல் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு ரோந்துப் நடவடிக்கையின் போது, சுமார் 29 கிலோ மற்றும் 800 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு டிங்கி படகு மற்றும் இரு சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

02 Jun 2021