பாதிக்கப்பட்ட MV X-PRESS PEARL கப்பலின் விசாரண நடவடிக்கைகளுக்காக கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் உதவி

கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட போது தீ விபத்துக்குள்ளான MV X-PRESS PEARL என்ற கொள்கலன் கப்பலை குறித்து விசாரணை நடத்தி வரும் அரசு அதிகாரிகளின் குழுவை இன்று (2021 ஜூன் 04) கப்பல் அமைந்துள்ள பகுதிக்கு இலங்கை கடலோர காவல்படையின் 'சமுத்ரக்ஷா' கப்பல் முலம் அழைத்து செல்லப்பட்டது.

MV X-PRESS PEARL கப்பலில் ஏற்பட்ட தீ திபத்தினால் கடல் சூழலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விசாரிப்பதற்கு கடல் நீர் மாதிரிகள் பெறுவதற்காக மற்றும் குறித்த இடத்தில் கண்காணிப்பை நடத்துவதற்கும் கப்பல் அமைந்துள்ள பகுதிக்கு விசாரணைக் குழுவை கொண்டு செல்ல வசதி செய்யுமாறு குற்றவியல் புலனாய்வுத் துறை கடற்படையிடம் கோரியுள்ளது. அதன்படி, விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அரசு ஆய்வாளர் துறையைச் சேர்ந்த 14 பேர் கொண்ட நிபுணர்கள் குழு இன்று இலங்கை கடலோர காவல்படை கப்பலான 'சமுத்ரக்ஷா' மூலம் அழைத்து செல்லப்பட்டது