நடவடிக்கை செய்தி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்பஹ மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 66 நபர்கள் கடற்படையினரால் மீட்பு

கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மேற்கு, தெற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களை உள்ளடக்கி 33 நிவாரண குழுக்களை கடற்படை நிறுத்தியுள்ளது. அதன் படி இன்று (2021 ஜூன் 05) பிற்பகல் கடற்படையினரால் கம்பஹ மற்றும் களுத்துறை மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிக்கித் தவித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 66 பேர் மீட்கப்பட்டனர்.

05 Jun 2021

‘345 கடல் மைல் தூரத்தில் பாதிக்கப்பட்ட ஒரு மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவி’என்ற தலைப்பின் கீழ் 2021 ஜூன் 04 அன்று வெளியிடப்பட்ட செய்தி வெளியீடுயுடன் தொடர்பானது

இலங்கையின் தென்கிழக்கில் உள்ள பெரிய இராவண கலங்கரை விளக்கத்திலிருந்து (Great Basses) சுமார் 345 கடல் மைல் (சுமார் 638 கி.மீ) தூரத்தில் நடைபெற்ற விபத்தொன்றால் காயமடைந்த இலங்கை பல நாள் மீன்பிடி படகொன்றில் மீனவரை சிகிச்சைக்காக கரக்கு கொண்டு வந்து உடனடி சிகிச்சைக்காக அனுப்ப கடற்படை இன்று (ஜூன் 05, 2021) நடவடிக்கை எடுத்துள்ளது.

05 Jun 2021

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புத்தலம் மாவட்டத்தில் 29 நபர்கள் கடற்படையால் மீட்பு

நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழை காரணத்தினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மேற்கு, தெற்கு, சபராகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்கள் உள்ளடக்கி கடற்படை விரைவான பதில் மற்றும் மீட்பு பிரிவின் 16 குழுக்கள் கடற்படை அனுப்பியுள்ளது. அதன் படி 2021 ஜூன் 4 அன்று புத்தலம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிக்கித் தவித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 29 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டது.

05 Jun 2021