MV X-PRESS PEARL கப்பலின் தீயால் பாதிக்கப்பட்ட கடற்கரையை தூய்மைப்படுத்தும் செயல்பாடு

MV X-PRESS PEARL கப்பலின் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து குப்பைகளை அகற்ற 2021 மே 26 அன்று கடற்படை மற்ற பங்குதாரர்களுடன் தொடங்கிய கடற்கரை சுத்தம் செய்யும் திட்டங்கள் மேலும் தொடர்கிறது.

கப்பலின் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட உஸ்வெடகெய்யாவ முதல் கெபுங்கொட வரை 9 கி.மீ தூரம் கொண்ட கடற்கரையில் பெரிதும் மாசுபட்ட உஸ்வெடகெய்யாவ, எலென்எகொட, சரக்குவ மற்றும் கெபுங்கொட ஆகிய கடற்கரை பகுதிகளில் இருந்து கடற்படையினரால் அகற்றப்பட்ட 1500 டன் குப்பை கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்திடம் தற்போது (17 ஜூன் 2021) ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி, 2021 மே 27 அன்று சரக்குவ மற்றும் கெபுங்கொட இடையே பெரிதும் மாசுபட்ட கடற்கரையின் நிலை மற்றும் 2021 ஜூன் 16 ஆம் திகதி தற்போதைய நிலைமை ஆகியவற்றை சித்தரிக்கும் தொடர் புகைப்படங்கள் கடற்படையின் கரையோர தூய்மைப்படுத்தும் நடவடிக்கை எவ்வாறு வெற்றிகரமான முடிவுக்கு வருகிறது என்பதை தெளிவாக பிரதிபலிக்கிறது.

சரக்குவ பகுதி

கெபுங்கொட பகுதி