நடுக்கடலில் படகு பழுதாகி தவித்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினரால் மீட்பு

படகில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறினால் தலைமன்னாருக்கு வடக்கு இலங்கை கடற்பரப்பில் தத்தளித்த 06 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு, 2022 ஜூலை 31 அன்று சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் (IMBL) மற்றொரு இந்திய மீன்பிடி படகொன்றிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி, இன்று (2022 ஜூலை 31) தலைமன்னாருக்கு வடக்கு இலங்கைக் கடற்பரப்பில் இலங்கை கடற்படைக் கப்பலான ரணஜய ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த பதிவு எண் IND/TN/10/MM/ 1032 என்ற ஒரு இந்திய படகை கண்கானிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது படகின் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, படகு இலங்கை கடல் பகுதிக்கு வந்துள்ளதாக தெரியவந்தது. இவ்வாறு, செயலிழந்த படகில் இருந்த 06 இந்திய மீனவர்களை கடற்படையினர் உடனடியாக மீட்டதுடன், அவர்களுக்கு உணவு, பானம் மற்றும் தேவையான மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், இலங்கை கடற்படை கப்பல் ரணஜய மூலம் விபத்தில் சிக்கிய இந்திய படகு மற்றும் 06 மீனவர்களை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சர்வதேச கடல் எல்லைக்கு கொண்டு சென்று மற்றொரு இந்திய படகிடம் ஒப்படைத்து, பாதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை பாதுகாப்பாக இந்தியா திரும்ப ஏற்பாடு செய்தது.

சர்வதேச உடன்படிக்கைகளின் கடமைகளின்படி, இலங்கைக்கு சொந்தமான கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்தில் பாதிக்கப்படுகின்ற கடல்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு தேவையான நிவாரணங்களை வழங்க இலங்கை கடற்படை தொடர்ந்து தயாராக உள்ளது.