நடவடிக்கை செய்தி

15 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 02 சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணம், தொண்டமனாறு பகுதியில் இன்று (2022 ஆகஸ்ட் 29) இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 51 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற வான் ஒன்று சந்தேகநபர்கள் இருவருடன் (02) கைது செய்யப்பட்டது.

29 Aug 2022

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 44 பேர் கடற்படையினரால் கைது

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 44 பேர் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு, வலைத்தோட்டம் கடற்பரப்பில் 2022 ஆகஸ்ட் 28 ஆம் திகதி இரவு கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.

29 Aug 2022

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று மன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக 2022 ஆகஸ்ட் 27 ஆம் திகதி இரவு தலைமன்னார் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறு (06) இந்திய மீனவர்களுடன் ஒரு இந்திய படகு கைது செய்யப்பட்டன.

29 Aug 2022