வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிமருந்துகள் 400 குச்சிகள் யாழ்ப்பாணம் ககரதீவுப் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம், ககரதீவில் இன்று (2022 ஒக்டோபர் 20) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தீவில் நுணுக்கமாக புதைக்கப்பட்டிருந்த வாட்டர் ஜெல் (Water Gel) எனப்படும் வர்த்தக வெடிமருந்து 400 குச்சிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெடிமருந்துகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடியினால் கடல்சார் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஞ்சதேவ நிருவனத்தின் கடற்படையினர் இன்று (2022 ஒக்டோபர் 20) யாழ்ப்பாணம் ககரதீவில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது தீவில் புதைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பை ஒன்று சோதனையிடப்பட்டதுடன் குறித்த பையில் கவனமாக பொதி செய்யப்பட்ட வாட்டர் ஜெல் 400 குச்சிகள் கைப்பற்றப்பட்டது.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் 05 மற்றும் 07 ஆம் திகதிகளில் வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் ககரதீவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 706 நீர் ஜெல் குச்சிகள் கைப்பற்றப்பட்டன.

இந்த வெடிபொருட்களை பின்னர் மீன்பிடிக்க பயன்படுத்தும் நோக்கில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதேவேளை, கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்படும் வரை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளது.