நடவடிக்கை செய்தி

6,622 மற்றும் 13,244 மில்லியன் ரூபாய்களுக்கு இடையில் பெறுமதியான 331 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இலங்கையில் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்று தென்கடலில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் இணைந்து அம்பாந்தோட்டை மகா ராவணா கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் தென் கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 6,622 மற்றும் 13,244 மில்லியன் ரூபாய்களுக்கு இடையில் வீதி பெறுமதியான 331 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்று மற்றும் ஆறு (06) சந்தேக நபர்கள் 2022 நவம்பர் 05 ஆம் திகதி கைது செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர்கள் இன்று (2022 நவம்பர் 7,) காலை காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், இதேவேளை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன போதைப்பொருட்களை பார்வையிடுவதற்காக காலி துறைமுகத்திற்கு வருகை தந்தார்.

07 Nov 2022