நடவடிக்கை செய்தி

ஆழ்கடலில் விபத்துக்குள்ளான சீன மீன்பிடிக் கப்பலைத் தேடும் மற்றும் மீட்கும் பணிக்காக இலங்கை கடற்படை பங்களித்தது

இலங்கைக்கு தெற்கு பகுதியில் உள்ள அவுஸ்திரேலிய தேடுதல் மற்றும் மீட்புப் வலயத்துக்கு சொந்தமான ஆழ்கடலில் 2023 மே 16 ஆம் திகதி கவிழ்ந்த 'LU PENG YUAN YU 028' என்ற சீன மீன்பிடிக் கப்பலைத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் பங்களிக்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தல்களின் படி இலங்கை கடற்படைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகு ஆழ்கடல் கண்கானிப்பு கப்பலுடன் கடற்படையின் சுழியோடி குழவொன்று சீன மீன்பிடி கப்பல் விபத்துக்குள்ளான கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டது.

23 May 2023

மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் முல்லைத்தீவு நயாறு, அலம்பில் கடற்பரப்பில் மற்றும் புல்முடே கோகிளாய் கடல் பிரதேசத்தில் மற்றும் கொக்கிளாய் தடாகம் பகுதியில் 2023 மே 22 ஆம் திகதி அதிகாலை மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமான முறையில் மின் விளக்குகள் மற்றும் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடித்துக்கொண்டிருந்த பதினாறு (16) நபர்களுடன் 07 டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

23 May 2023

காலி, வக்வெல்ல பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்ற கடற்படை பங்களிப்பு

கிங்தோட்டை பகுதியில் கடலுக்கு செல்லும் கிங் கங்கை ஊடாக வக்வெல்ல பகுதியில் உள்ள குறுகிய பாலத்தில் நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணிகளில் கடற்படையினர் 2023 மே மாதம் 19 மற்றும் 22 ஆம் திகதிகளில் ஈடுபட்டனர்.

23 May 2023

வர்த்தக வெடிபொருட்களுடன் பெண் ஒருவர் திருகோணமலையில் கைது

இலங்கை கடற்படையினர் குச்சவேளி பொலிஸாருடன் இணைந்து திருகோணமலை குச்சவேளி கசீம்நகர் பகுதியில் இன்று (2023 மே 22) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான வீடொன்று சோதனையிட்டதுடன் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த வாட்டர் ஜெல் (Water Gel) எனப்படும் வர்த்தக வெடிபொருட்களின் ஐம்பத்து நான்கு குச்சிகள் (54) மற்றும் ஐம்பது (50) மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்களுடன் ஒரு பெண் (01) கைது செய்யப்பட்டார்.

23 May 2023