யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை மற்றும் அரியாலை பகுதிகளில் 65 வர்த்தக வெடிபொருட்கள் குச்சிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினர் 2023 ஜூலை மாதம் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை மற்றும் அரியாலை பகுதிகளில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில் போது ஊர்காவற்துறை அல்லப்பிட்டி களப்பு பகுதியில் மற்றும் அரியாலை மணியந்தோட்டம் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதினெட்டு மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள், 65 வணிக வெடிபொருட்கள் மற்றும் 155 செ.மீ நீளமுள்ள பாதுகாப்பு உருகிகள் கைப்பற்றப்பட்டது.

வெடிபொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 2023 ஜூலை மாதம் 4 ஆம் திகதி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் கஞ்சதேவ நிருவனத்தின் கடற்படையினர் ஊர்காவற்துறை, அல்லப்பிட்டி களப்பு பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த களப்பு பகுதியில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பை ஒன்று கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதுடன் அங்கு, எட்டு (08) மின்சாரம் சாராத டெட்டனேட்டர்கள் மற்றும் 30 வணிக வெடிகுண்டுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

அத்துடன் யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் 2023 ஜூலை மாதம் 05 ஆம் திகதி இலங்கை கடற்படைக் கப்பல் வேலுசுமண நிருவனத்தின் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கரையோரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பை ஒன்று அவதானித்து சோதனையிடப்பட்டதுடன் அந்த பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பத்து (10) மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள், 35 வர்த்தக வெடிபொருட்கள் குச்சிகள் மற்றும் சுமார் 155 செ.மீ நீளமான பாதுகாப்பு உருகிகள் ஆகியவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலும்,சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் நோக்கில் இந்த வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை கைது செய்யப்பட்ட வெடிபொருட்கள் பாதுகாப்பாக கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளது.