சுமார் 606 கிலோ கிராம் பீடி இலைகள் கல்பிட்டி பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் கல்பிட்டி தடாகத்திற்குச் சொந்தமான மட்டத்தீவு அண்மித்த பகுதியில் 2023 ஜூலை 24 ஆம் திகதி இரவு மெற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடற்பகுதியில் மிதந்த 606 கிலோ கிராம் (ஈரமான எடை) பீடி இலைகளை கைப்பற்றினர்.

கடல் வழிகளாக மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடல்பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, 2023 ஜூலை மாதம் 24 ஆம் திகதி இரவு, வடமேற்கு கடற்படைக் கட்டளைக்கு உட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிருவனத்தின் கடற்படையினர் கல்பிட்டி குளத்திற்குச் சொந்தமான மட்டத்தீவு அண்மித்த பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர். அங்கு மிதந்து வந்த நிலையில் பத்தொன்பது (19) பைகளில் (ஈரமான எடை) பொதி செய்யப்பட்ட சுமார் 606 கிலோ கிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. குறித்த பீடி இலைகள் கடற்படையின் நடவடிக்கைகள் காரணமாக கடத்தல்காரர்களால் நிலத்திற்கு கொண்டு வர முடியாமல் இந்த கடற்பரப்பில் கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.