தெற்கு கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

ஹம்பாந்தோட்டையில் இருந்து சுமார் 20 கடல் மைல் (சுமார் 37 கிமீ) தொலைவில், இலங்கைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில், இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றில் நோய்வாய்ப்பட்ட மீனவரொருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக கொண்டு செல்ல இலங்கை கடற்படையினர் இன்று (2023 ஆகஸ்ட் 1) நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2023 ஜூலை 30 ஆம் திகதி கலமெடிய மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஐந்து (05) மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற ‘Warshan Putha 03’ (பதிவு எண். IMUL-A-0872 MTR) பல நாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவர் ஹம்பாந்தோட்டையில் இருந்து இலங்கைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில், திடீரென நோய்வாய்ப்பட்டதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் அதிகாரிகள் கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவித்தலுக்கு உடனடியாக பதிலளித்த கடற்படையினர், நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வருவதற்காக தென் கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட P475 விரைவு தாக்குதல் ரோந்து படகு அப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். அதன்படி, நிலவும் கடல் சீற்றத்தை எதிர்கொண்டு பெரும் முயற்சியுடன் 2023 ஆகஸ்ட் 1 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் இருந்து சுமார் 20 கடல் மைல் (சுமார் 37 கிமீ) தொலைவில் நோய்வாய்ப்பட்ட மீனவரை குறித்த படகு மூலம் மீட்கப்பட்ட பின் முதலுதவி வழங்கி இன்று (2023 ஆகஸ்ட் 01) ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்தில் பாதிக்கப்பட்டும் கடற்சார் மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.