திருகோணமலை ஜெயநகர் பகுதியில் வர்த்தக வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினர் குச்சவேளி பொலிஸாருடன் இணைந்து திருகோணமலை ஜெயநகர் மற்றும் பொடுவகட்டு கடற்பகுதியில் 2023 ஜூலை 31 மற்றும் 2023 ஆகஸ்ட் 03 ஆம் திகதிகளில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது 05 வர்த்தக வெடி குச்சிகள், பதினான்கு (14) வெடிபொருட்கள் மற்றும் பதினேழு (17) மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்களுடன் சந்தேக நபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

வெடிமருந்துகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, 2023 ஜூலை 31 ஆம் திகதி திருகோணமலை ஜெயநகர் பகுதியில் கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா நிருவனத்தின் கடற்படையினர் குச்சவெளி பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்று சோதனை செய்யப்பட்டதுடன் குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வர்த்தக வெடிபொருட்களின் ஐந்து குச்சிகள் (05), பதப்படுத்தப்பட்ட வெடிபொருட்களின் மூன்று (03) பாகங்கள் மற்றும் நான்கு (04) மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்களுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

மேலும், 2023 ஓகஸ்ட் 03 ஆம் திகதி இலங்கை கடற்படைக் கப்பல் வலகம்பா நிருவனத்தின் கடற்படையினர் திருகோணமலை பொடவகட்டு கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மூழ்கி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் குழாய் ஒன்று அவதானித்து பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு உள்ளே நுணுக்கமாக பதப்படுத்தப்பட்ட பதினொரு (11) வெடிமருந்து பொதிகளும், பதின்மூன்று (13) மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்களும் கைப்பற்றப்பட்டன.

மேலும், 2023 ஜூலை மாதம் 31 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 43 வயதுடைய சந்தேக நபர் குச்சவெளி பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட வர்த்தக வெடிபொருட்கள் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், 2023 ஆகஸ்ட் 3 ஆம் திகதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட வணிக வெடிபொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படும் வரை கடற்படையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த வணிக வெடிபொருட்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.