சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 75 கிலோ கிராம் பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் புத்தளம், சேரக்குளிய கடற்கரைப் பகுதியில் இன்று (2023 ஆகஸ்ட் 4,) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்வதற்கு தயார்படுத்தப்பட்டிருந்த நிலையில் எழுபத்தைந்து (75) கிலோகிராம் (ஈரமான எடை) எடையுள்ள பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடல் வழிகளாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, இன்று (2023 ஆகஸ்ட் 4,) வடமேற்கு கடற்படை கட்டளையின் விரைவு நடவடிக்கை படகுகள் படையணியினரால் புத்தளம், சேரக்குளிய கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான வகையில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றை அவதானித்து சோதனையிடபட்டது. அங்கு, சட்டவிரோதமான முறையில் கடற்கரைப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு முச்சக்கர வண்டி மூலம் கொண்டு செல்ல தயார்படுத்தப்பட்ட மூன்று பார்சல்களில் (03) பொதி செய்யப்பட்ட சுமார் 75 கிலோ (ஈரமான எடை) பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் பொம்பரிப்பு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேகநபர் (01), முச்சக்கர வண்டி மற்றும் சுமார் 75 கிலோ எடையுள்ள பீடி இலைகள் (ஈரமான எடை) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வனாத்தவில்லுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன