94 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2023 ஒக்டோபர் 16) அதிகாலை தலைமன்னார், ஊறுமலை கடற்கரையில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, நான்கு (04) கிலோகிராம் ஐஸ் (Crystal Methamphetamine), ஒரு (01) கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐந்து (5) கிலோகிராம் ஹஷிஸ் 05) கொண்ட டிங்கி படகொன்று (01) கைப்பற்றினர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் தொடர்ந்து பல நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்மன்னா நிருவனத்தின் கடற்படையினர் இன்று (2023.10.16) அதிகாலை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது தலைமன்னார், ஊருமலே கடலோர பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று அவதானித்து சோதனைக்கு உட்படுத்தினர். அங்கு, சுமார் 04 கிலோ மற்றும் 194 கிராம் எடையுள்ள ஐஸ் நான்கு பொதிகளும், 01 கிலோ மற்றும் 034 கிராம் எடையுள்ள ஹெராயின் ஒரு பார்சலும், சுமார் 05 கிலோ மற்றும் 254 கிராம் எடையுள்ள ஐந்து ஹாஷிஸ் பொதிகளும் கண்டுபிடிக்கப்பட்டதுடன் போதைப் பொருட்கள் மற்றும் குறித்த டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த வீதிப் பெறுமதி சுமார் தொண்ணூற்று நான்கு (94) மில்லியன் ரூபாவாகும் என நம்பப்படுகிறது.

மேலும், இந்த நடவடிக்கை மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நான்கு (04) கிலோ நூற்று தொண்ணூற்று நான்கு (194) கிராம் ஐஸ், ஒரு (01) கிலோ முப்பத்து நான்கு (034) கிராம் ஹெராயின், ஐந்து (05) கிலோ இருநூற்றி ஐம்பத்து நான்கு (254) கிராம் ஹஷிஸ் மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.