நடவடிக்கை செய்தி

4728 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான 210 கிலோவிற்கும் அதிக ஹெரோயின் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகொன்று காலிக்கு மேற்கே ஆழ்கடலில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகள் இணைந்து நடத்திய புலனாய்வு நடவடிக்கையின் மூலம் கிடைத்த தகவலின்படி, இலங்கை கடலோர காவல்படையின் சமுத்திரரக்ஷா என்ற கப்பலின் கடற்படையினர் காலிக்கு மேற்கே 91 கடல் மைல் (168 கிமீ) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்று கைது செய்துள்ளனர். குறித்த கப்பலை இன்று (2023 அக்டோபர் 22) காலை தெவுந்தர மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட பின் இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்துடன் இணைந்து கப்பலில் மேற்கொள்ளப்பட்ட உன்னிப்பான சோதனையின் போது 4728 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சுமார் 210 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை நேரில் ஆய்வு செய்வதற்காக இன்று காலை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, தெவுந்தர மீன்பிடி துறைமுகத்திற்கு வருகை தந்தார்.

22 Oct 2023