நடவடிக்கை செய்தி

4500 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான 219 கிலோவிற்கும் அதிக ஹெரோயின் போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலொன்று கடற்படையினரால் கைது

அரச புலனாய்வுப் பிரிவினரால் இலங்கை கடற்படையின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த உளவுத் தகவலின்படி, இலங்கை கடற்படைக் கப்பலான விஜயபாகு கப்பலின் கடற்படையினரால் சுமார் 292 கடல் மைல் (சுமார் 540 கி.மீ) தொலைவில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் போது 4500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வீதிப் பெறுமதியான (பொதி எடையுடன்) 219 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் ஐந்து (05) சந்தேகநபர்கள் கைது செய்தனர். இன்று (24 அக்டோபர் 2023) காலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட குறித்த போதைப்பொருளை நேரில் பார்வையிடுவதற்காக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான திரு. சாகல ரத்நாயக்க மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தனர்.

24 Oct 2023