வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஜா எல பகுதி மக்களுக்கு கடற்படையினரால் நிவாரணம் வழங்கப்பட்டது

அண்மையில் பெய்த கடும் மழையினால் ‘ஜா-எல கால்வாய்’ நிரம்பி ஏற்பட்ட வெள்ள நிலைமையின் பின்னர், 2023 நவம்பர் 08 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் ஜா-எலவில் அவசரகால நிவாரண நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. அதன்படி, அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்க கடற்படையின் நிவாரணக் குழுக்கள் முன்வந்தன.

ஜா-எல கால்வாய் நிரம்பி வழிவதால் ஜா-எல, பண்டிகொட பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கடற்படை நிவாரணக் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக தயாரிக்கப்பட்ட உணவுகளை வழங்கி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தனர்.