சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

கல்பிட்டி கீரிமுந்தலம தடாகப் பகுதியில் இன்று (2023 டிசம்பர் 03,) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த தடாகப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் நானூற்று அறுபத்தைந்து (465) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிருவனத்தின் கடற்படையினர் இன்று (2023 டிசம்பர் 03) காலை கல்பிட்டி கீரிமுந்தலம தடாகப் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த தடாகப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான 08 சாக்கு மூட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சாக்குகளில் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்ட கடற்படையினர் ஈரமான எடையுடன் கூடிய சுமார் 465 கிலோகிராம் பீடி இலைகளை கைப்பற்றியுள்ளனர்.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சுமார் நானூற்று அறுபத்தைந்து (465) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை கடற்படையின் பாதுகாப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.