புத்தளம் தடாகத்தில் இருந்து 04 கிலோ கிராமுக்கும் அதிகமான தங்கத்தை கடற்படையினர் மீட்டுள்ளனர்

இலங்கை கடற்படையினரால் புத்தளம் தடாகத்தில் பத்தலங்குண்டுவ தீவிற்கு அருகிலுள்ள கடலில் 2023 டிசம்பர் 08 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடத்தல்காரர்களால் கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு (04) கிலோ கிராமுக்கும் அதிகமான தங்கம் அடங்கிய பார்சலொன்று கைது செய்யப்பட்டது. மெலும், இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் (02) மற்றும் ஒரு டிங்கி படகும் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

கடல் வழிகளாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில், கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், 2023 டிசம்பர் 08 ஆம் திகதி புத்தளம் தடாகத்தில் பத்தலங்குண்டுவ தீவுக்கு அண்மித்த கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று குறித்த கடல் பகுதியில் மூழ்கி இருந்ததை கண்காணித்து ஆய்வு செய்யப்பட்டதுடன் குறித்த பார்சலில் மிக நுணுக்கமாக அடைக்கப்பட்டிருந்த நான்கு (04) கிலோவுக்கும் அதிகமான தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடத்தல்காரர்கள் இந்த தங்கக் கையிருப்பை பின்னர் எடுத்துச் செல்லலாம் என்ற நம்பிக்கையில் சட்டவிரோதமான முறையில் மூழ்கடித்திருக்கலாம் என நம்பப்படுகிறது, இந்தக் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இருவர் (02) மற்றும் டிங்கி படகொன்று (01) ஆகிய குறித்த கடலில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 27 மற்றும் 35 வயதுடைய கல்பிட்டி பகுதியில் வசிப்பவர்கள் எனவும், இரண்டு சந்தேகநபர்கள் (02), நான்கு கிலோவுக்கும் அதிகமான தங்கம் (04) மற்றும் டிங்கி படகு (01) ஆகிய மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.