சட்டவிரோத போதை மாத்திரைகள் பொதி யொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினரால் மன்னார் ஒலுதுடுவாய் கடற்கரைப் பகுதியில் 2023 டிசம்பர் 11 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது அப்பகுதியில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் சுமார் ஆறாயிரம் (6,000) Pregabalin போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, வடமத்திய கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்மன்னா மற்றும் கஜபா ஆகிய நிருவனங்களில் கடற்படையினர் மன்னார் ஒலுத்துவாய் கடற்கரைப் பகுதியில் 2023 டிசம்பர் 11 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு (04) பொதிகள் அவதானித்து ஆய்வு செய்யப்பட்டன. அங்கு, குறித்த பார்சல்களில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் சுமார் ஆறாயிரம் (6,000) Pregabalin போதை மாத்திரைகளை கடற்படையினர் கைப்பற்றினர்.