சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட பீடி இலைகள் ஒருதொகை கடற்படையினரால் மேற்குக் கடலில் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினர் இன்று (2023 டிசம்பர் 17) நீர்கொழும்பு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடல் பகுதி ஊடாக சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முயன்ற சுமார் 1143 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் 02 டிங்கி படகுகளுடன் நான்கு (04) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் களனி, கெமுனு மற்றும் ரங்கல ஆகிய நிருவனங்களின் கடற்படையினர் P236 கரையோர ரோந்து கப்பலை அனுப்பி, இன்று (2023 டிசம்பர் 17) நீர்கொழும்பு கடற்பகுதியில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது குறித்த கடற்பகுதி வழியாக நிலத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்த இரண்டு (02) சந்தேகத்திற்கிடமான டிங்கி படகுகளை அவதானித்து சோதனை செய்யப்பட்டது. அப்போது முப்பத்தைந்து (35) பைகளில் பொதி செய்யப்பட்ட 1143 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) டிங்கி படகுகளும் நான்கு (04) சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நான்கு (04) சந்தேகநபர்களும் 33 முதல் 53 வயதுக்கு இடைப்பட்ட நீர்கொழும்பு பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த நாங்கு சந்தேகநபர்கள் (04), சுமார் 1143 கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.