கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவை.

சேவா வனிதா பிரிவின் தலைவியான திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்தின்படி, சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவையாக கடற்படையில் பணியாற்றும் கடற்படை வீரர் டி.எம்.ஜே கருணாரத்னவுடைய இ.இ 89627 மூன்று இரட்டைக் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு தேவையான பால் மா இன்று (2020 ஆகஸ்ட் 13) வழங்கப்பட்டது.

கடற்படை வீரர் டி.எம்.ஜே.கருணரத்ன இ.இ 89627 விடுத்த வேண்டுகோளின் படி, அவரது மூன்று இரட்டைக் குழந்தைகளுக்கும், ஒன்றரை வயது குழந்தைக்கும் மருத்துவ ஆலோசனைகளின் கீழ் 06 மாதங்களுக்கு தேவையான பால் மா வழங்குவதுக்கான முதல் கட்டமாக ஒரு மாதத்திற்கு தேவையான பால் மா இவ்வாரு சேவா வனிதா பிரிவின் தலைவியான திருமதி சந்திமா உலுகேதென்ன தலைமையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சேவா வனிதா பிரிவின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சேவா வனிதா பிரிவின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.