கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி வெலிசர சேவா வனிதா திட்டங்களில் கண்கானிப்பு விஜயம்

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவியாக பதவியேற்ற பின்னர் திருமதி சந்திமா உலுகதென்ன தனது முதல் ஆய்வு சுற்றுப்பயணமாக 2020 ஆகஸ்ட் 13 ஆம் திகதி வெலிசர கடற்படை வளாகத்தில் கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் நடத்தப்படுகின்ற சேவா வனிதா திட்டங்களின் கண்கானிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகதென்ன வெலிசர கடற்படை வளாகத்தில் கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் நடத்தப்படுகின்ற சேவா வனிதா நலன்புரி கடை, சேவா வனிதா முன் பாடசாலை, சேவா வனிதா யோகட் திட்டம், சேவா வனிதா அழகு நிலையம், சேவா வனிதா கணினி பயிற்சி மையம், சேவா வனிதா பேக்கரி, சேவா வனிதா அபான்ஸ் நிலையம், சேவா வனிதா மலர் அலங்கார பிரிவு, சேவா வனிதா பதிக் வடிவமைப்பு மையம், சேவா வனிதா களஞ்சியசாலை மற்றும் சிதுலிய செவன விடுமுறை விடுதி ஆகியவற்றை பார்வையிட்டார். குறித்த சுற்றுப்பயணத்தின் போது, திருமதி சந்திமா உலுகேதென்ன அந்த திட்டங்களின் அன்றாட நடவடிக்கைகள் குறித்து விசாரித்தார் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களின்படி நடவடிக்கைகளை பராமரிக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் கடற்படை சேவா வனிதா பிரிவு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.