கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி கிழக்கு கடற்படை கட்டளையில் சேவா வனிதா திட்டங்களை கண்கானித்தார்.

கிழக்கு கடற்படை கட்டளையில் மேற்கொள்ளப்படும் கடற்படை சேவா வனிதா திட்டங்களை அவதானிப்பதற்காக கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன 2020 செப்டம்பர் 09 மற்றும் 10 திகதிகளில் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம் செய்தார்.

அதன்படி, 2020 செப்டம்பர் 09 ஆம் திகதி, இலங்கை கடற்படை கப்பல் திஸ்ஸ நிருவனத்தின் நடத்தப்படும் சேவா வனிதா நலன்புரி விற்பனை நிலையம், சேவா வனிதா அபான்ஸ் நிலையம், சேவா வனிதா பரிசுக் கடை, சேவா வனிதா அழகு நிலையம், சேவா வனிதா தகவல் தொழில்நுட்ப பயிற்சி மையம் மற்றும் சேவா வனிதா யோகட் திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்து, அந்த திட்டங்களின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தார்.

மேலும், கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை பணியாளர்களுக்கு கடற்படை சேவா வனிதா பிரிவு வழங்கிய நலன்புரி ஏற்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கில், சேவா வனிதா பிரிவின் தலைவி திருகோணமலை வடக்கில் இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள நிலாவேலி மூத்த மற்றும் இளைய அதிகாரிகளின் விடுமுறை விடுதி மற்றும் நிலாவேலி மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்களின் விடுமுறை விடுதி கண்கானித்தார். அதன்பிறகு, இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா நிறுவன வளாகத்தில் ஒரு புதிய சேவா வனிதா யோகட் திட்டத்தை நிறுவுவதற்கு பொருத்தமான இடத்தைத் ஆய்வு செய்வதில் இணைந்தார். இந்த வருகையை குறிக்க, சேவா வனிதா பிரிவின் தலைவி இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா நிறுவன வளாகத்தில் ஒரு மா மரக்கன்றும் நட்டினார்.

மேலும், சேவா வனிதா பிரிவின் தலைவி 2020 செப்டம்பர் 10 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் திஸ்ஸ நிருவனத்தில் உள்ள சேவா வனிதா பாலர் பாடசாலைக்குச் சென்று பாலர் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதை ஆய்வு செய்தார். மேலும் பாலர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய பின். பாலர் பாடசாலை வளாகத்தில் ஒரு சந்தன மரம் மற்றும் மா மரக்கன்று நடப்பட்டன.

இந்த விஜயத்தின் போது, சேவா வனிதா பிரிவின் தலைவி கிழக்கு கடற்படை கட்டளையின் சேவா வனிதா திட்டங்களுடன் இணைக்கப்பட்ட ஊழியர்களுடன் திட்டங்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினார். மேலும் சிறந்த சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அந்த நடவடிக்கைகளை முறையான முறையில் தொடருமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த கண்கானிப்பு விஜயத்துக்காக கடற்படை சேவா வனிதா பிரிவின் செயற்குழு உறுப்பினர் திருமதி திலினி பெரேரா, கடற்படை கட்டளை அதிகாரி திருகோணமலை வடக்கு, இலங்கை கடற்படை கப்பல் திஸ்ஸ, விஜயபா, வலகம்பா ஆகிய நிருவனங்களில் கட்டளை அதிகாரிகள் மற்றும் சேவா வனிதா பிரிவின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.