சேவா வனிதா பிரிவின் ஆறு (06) மூத்த உறுப்பினர்களுக்கான பிரியாவிடை விருந்து

கடற்படை சேவா வனிதா பிரிவின் ஆறு (06) மூத்த உறுப்பினர்களுக்கான பிரியாவிடை விருந்து இன்று (2020 செப்டம்பர் 12,) கடற்படை தலைமையகத்தில் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் நடைபெற்றது.

கடற்படை இசைக்குழு மற்றும் கடற்படை கலாச்சார நடனக் குழுவினரின் பாடல் மற்றும் நடனம் மூலம் பிரியாவிடை விருந்து வண்ணமயமானது. கடற்படை சேவா வனிதா பிரிவில் இருந்து வெளிச்செல்லும் 06 மூத்த உறுப்பினர்களான திருமதி வசந்தி கமகே, திருமதி. நோயலின் சேனாதீர, திருமதி. ஷிரோமி ஹீனட்டிகல, திருமதி. ஜீவனி செனவிரத்ன, திருமதி. சித்ரானி கலேவத்த மற்றும் திருமதி காயத்ரி ஜினதாச ஆகியோருக்கு கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவியால் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த பிரியாவிடை விருந்தில் பெண் அதிகாரிகள் உட்பட சேவா வனிதா பிரிவின் மூத்த மற்றும் இளைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.