சேவா வனிதா பதிக் மற்றும் மலர் ஏற்பாட்டு பிரிவுக்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்தின்படி சேவா வனிதா பதிக் மற்றும் மலர் ஏற்பாட்டு பிரிவுகள் வழங்கும் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் ஒரு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி தலைமையில் 2020 அக்டோபர் 25 ஆம் திகதி இலங்கை கெமுனு நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.

மேலும், கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது, மேலும் புத்த சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளித்து, புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந் நிகழ்வுக்காக கடற்படை கட்டளை அதிகாரி (வெலிசர) கமடோர் ஏ.எஸ்.எல் கமகே, சேவா வனிதா பிரிவின் மூத்த மேற்பார்வை அதிகாரி கமடோர் யு.எஸ். செனவிரத்ன, செயல் இயக்குநர் கட்டிட பொறியியல், கொமடோர் எம்.ஜே.ஆர்.ஆர். மெதகொட துணை இயக்குநர் கடற்படை சிவில் பொறியியல் (திட்டமிடல்) கமடோர் எம்.ஆர்.பி சந்திரசேகர மற்றும் இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் கட்டளை அதிகாரி உட்பட குறைந்த எண்ணிக்கையிலான கடற்படை வீரர்களும் கலந்து கொண்டனர்.