புதிய சேவா வனிதா யோகட் திட்டக் கட்டடத்தைத் திறந்து வைப்பு மற்றும் ஒரு புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு வடமேற்கு கடற்படைக் கட்டளையில் இடம்பெற்றது

வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் பரன நிருவனத்தில் கட்டப்பட்ட புதிய சேவா வனிதா யோகட் திட்டக் கட்டடத்தைத் திறந்து வைப்பு மற்றும் தம்பபண்ணி நிருவனத்தில் புதிய சேவா வனிதா நலன்புரி விற்பனை நிலையத்திற்கும் யோகட் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டும் நிகழ்வு சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்ன தலைமையில் 2020 ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் பரன மற்றும் தம்பப்பன்னி நிருவன வளாகங்களில் இடம்பெற்றது.

கடற்படையில் பணியாற்றும் கடற்படையினர்களின் நலனுக்கான பரன நிறுவனத்தில் சேவா வனிதா பிரிவு நடத்தும் சேவா வனிதா யோகட் திட்டத்தின் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தி, கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன அக்டோபர் 30 ஆம் திகதி இந்த புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும், வட மேற்கு கடற்படை கட்டளையில் சேவா வனிதா பிரிவின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற யோகட் திட்டங்கள் மற்றும் நலன்புரி விற்பனை நிலையங்கள் மூலம் கடற்படையினர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்தி இலங்கை கடற்படை கப்பல் தம்பப்பன்னி நிருவனத்தில் மற்றொரு நலன்புரி விற்பனை நிலையத்திற்கு மற்றும் யோகட் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவியால் பரன நிறுவனத்தின் புதிய சேவா வனிதா யோகட் திட்ட கட்டிடத்தின் முன்னும், தம்பப்பன்னி நிறுவன வளாகத்தில் புதிதாக கட்டவுள்ள சேவா வனிதா நலன்புரி விற்பனை நிலையம் முன்னும், சேவா வனிதா யோகட் திட்டத்தின் அருகிலும் மா மரக்கன்றுகளை நட்டப்பட்டது.

நாட்டில் தற்போதுள்ள சுகாதார மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்ட இந்த திட்டங்களுக்காக கடற்படை சேவா வனிதா பிரிவின் செயற்குழு உறுப்பினர் திருமதி சந்திரிக்கா தசநாயக்க, வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டி.கே.பி. தஸநாயக்க மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி மற்றும் அவரின் மனைவி உட்பட மூத்த மற்றும் இளைய அதிகாரிகளும் குறைந்த எண்ணிக்கையிலான மாலுமிகளும் கலந்து கொண்டனர்.