பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சித்ராணி குணரத்ன அவர்கள் திருகோணமலையில் உள்ள கடற்படை சேவா வனிதா திட்டங்களை பார்வையிட்டார்.

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சித்ராணி குணரத்ன அவர்கள், 2020 டிசம்பர் 12 அன்று திருகோணமலை இலங்கை கடற்படை கப்பல் திஸ்ஸ நிறுவனத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கடற்படை சேவா வனிதா திட்டங்களை பார்வையிட்டார்.

இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சந்திமா உலுகேதென்னவின் அழைப்பின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தளபதி இந்த கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் கழந்துகொண்டுள்ளதுடன் சேவா வனிதா நலன்புரி விற்பனை நிலையம், சேவா வனிதா அபான்ஸ் நிலையம், சேவா வனிதா பரிசு நிலையம், சேவா வனிதா அழகு நிலையம், சேவா வனிதா கணினி பயிற்சி மையம், சேவா வனிதா முன்பள்ளி மற்றும் பகல்நேர பராமரிப்பு மையத்தில் கண்காணிப்பு சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டுள்ளார்.

மேலும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சித்தாரணி குணரத்ன, சேவா வனிதா முன்பள்ளி வளாகத்தில் மரக்கன்றும் நட்டினார். கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சந்திமா உலுகேதென்ன, முன்பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் உருவாக்கிய நினைவு பரிசை பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தளபதிக்கு வழங்கினார்.

கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயத்தின் போது கடற்படை சேவா வனிதா செயற்குழு உறுப்பினர் திருமதி திலினி பெரேரா, சேவா வனிதா பிரிவு உறுப்பினர்கள் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் திஸ்ஸ நிருவனத்தின் அதிகாரிகள் மற்றும் சேவா வனிதா பிரிவின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.