கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி வட மத்திய கடற்படை கட்டளையின் சேவா வனிதா திட்டங்களை பார்வையிட்டார்.

2020 டிசம்பர் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் வடமத்திய கடற்படை கட்டளைக்கு விஜயம் செய்த கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன கட்டளையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சேவா வனிதா திட்டங்களை ஆய்வு செய்தார்.

அதன் படி, இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய நிருவனத்தில் உள்ள சேவா வனிதா நலன்புரி விற்பனை நிலையம், அபான்ஸ் நிலையம், சேவா வனிதா யோகட் திட்டம் மற்றும் சேவா வனிதா முன்பள்ளி இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா மற்றும் இலங்கை கடற்படை கப்பல் புவனெக ஆகிய நிருவனங்களில் உள்ள சேவா வனிதா யோகட் திட்டங்கள் பார்வையிட்ட சேவா வனிதா பிரிவின் தலைவி திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் திட்டங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொறுப்பான திட்ட அலுவலர்களுக்கு மேலதிக ஆலோசனைகளையும் வழங்கினார்.

இந்த விஜயத்தின் போது, இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபயவில் நடத்தப்படுகின்ற முன்பள்ளியின் ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட சிறப்பு நினைவுச்சின்னம், கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவிக்கு வழங்கப்பட்டதுடன் வட மத்திய கடற்படை கட்டளைக்கு தனது வருகையை குறிக்கும் வகையில், கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி பண்டுகாபய நிருவனத்தில் உள்ள தயிர் திட்டம் வளாகத்தில் ஒரு மா மரக்கன்றும் நட்டார்.

கோவிட் -19 தொற்றுநோய் பரவாமல் தடுக்க வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்த கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் கடற்படை சேவா வனிதா பிரிவின் நிர்வாகக் குழு உறுப்பினர் திருமதி கங்கா டயஸ் மற்றும் பணியாளர்கள் குழு ஆகியோர் பங்கேற்றனர்.