வெலிசர கடற்படை வளாகத்தில் உள்ள உணவகங்கள் சேவா வனிதா பிரிவின் கீழ் மறுவடிவமைப்பில் திறந்து வைப்பு

வெலிசர கடற்படை வளாகத்தில் இணைக்கப்பட்ட கடற்படையினர், கொழும்பு கடற்படை பொது மருத்துவமனை வளாகத்திக்கு வருகை தரும் கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் வெலிசர கடற்படை வளாகத்தில் மற்றும் கொழும்பு கடற்படை பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள சேவா வனிதா உணவகங்கள் (Cafeteria) மறுவடிவமைப்பு செய்து 2021 ஜனவரி 25 அன்று கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் அழைப்பின் பேரில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்காக சேவா வனிதா பிரிவின் துணைத் தலைவி திருமதி குமாரி வீரசிங்க, சேவா வனிதா பிரிவு உறுப்பினர்கள், கொடி அதிகாரிகள், அழைக்கப்பட்ட மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் உட்பட சேவா வனிதா பிரிவின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், சேவா வனிதா பிரிவின் கீழ் இயங்கும் சேவா வனிதா பதிக் மற்றும் மலர் வளர்ப்பு பிரிவுகளால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிட வளாகத்தை சேவா வனிதா பிரிவின் தலைவி ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து, இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் நாய் பிரிவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய சிகிச்சை மையம் மற்றும் நிர்வாகக் கட்டடத்திற்கு சேவா வனிதா பிரிவின் தலைவியால் அடிக்கல் நாட்டப்பட்டன. மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி, ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன, சேவா வனிதா பிரிவின் நிர்வாக குழு உறுப்பினர் திருமதி அயோனி வேவிட மற்றும் கடற்படை கட்டளை அதிகாரி (வெலிசர) உட்பட கடற்படை சேவா வனிதா பிரிவு ஊழியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


කොළඹ නාවික මහරෝහල පරිශ්‍රයේ ස්ථාපිත සේවා වනිතා භෝජනාගාරයන් නව මුහුණුවරකින් විවෘත කිරීම


නාවික හමුදා සුනඛ සංචිතය වෙනුවෙන් ශ්‍රීලංනානෞ ගැමුණු ආයතනයේ නව ගොඩනැගිල්ලක් සඳහා මුල්ගල තැබීම සහ සේවා වනිතා ඒකකය යටතේ ක්‍රියාත්මක වන බතික් හා මල් සැකසුම් එකකයන් සඳහා ඉදිකෙරෙන ගොඩනැගිල්ල නිරීක්‍ෂණය කිරීම