கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவை

சேவா வனிதா பிரிவு மூலம் மேற்கொள்ளப்படுகின்ற சமூக சேவை திட்டமொன்று 2021 பிப்ரவரி 01 ஆம் திகதி சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

அதன் படி தற்போது கடற்படையில் பணியாற்றி வரும், சிறிய அதிகாரி எக்ஸ்எஸ் 40624 எச்.எம்.ஜே.கே ஹேரத்துடைய தந்தையின், கடற்படை வீரர் எக்ஸ்எஸ் 82853 எச்.எம்.யூ.சி குமாரவுடைய அம்மாவின் மற்றும் கடற்படை வீரர் வி.ஏ.64751 டப்.எம்.ஆர்.பி விக்கிரமசிங்கவுடைய மனைவியின் தாயின் நோய்கள் காரணமாக இந்த கடற்படை வீரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சக்கர நாற்காலிகள் வழங்குதல் சேவா வனிதா பிரிவின் தலைவியின் ஆதரவின் கீழ் நடைபெற்றது.

மேலும், இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷின நிறுவனத்தின் கட்டளை அதிகாரியின் வேண்டுகோளின் பேரில் இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷின நிறுவனத்தில் நிறுவப்பட்ட கடற்படை முன்பள்ளியின் பயன்பாட்டிற்கு தேவையான ஒரு கணினி இயந்திரம் சேவா வனிதா பிரிவின் தலைவியால் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சேவா வனிதா பிரிவின் துணைத் தலைவி திருமதி குமாரி வீரசிங்க, செயற்குழு உறுப்பினர்களான திருமதி அயோனி வேவிட மற்றும் மனோரி கமகே உட்பட கடற்படை சேவா வனிதா பிரிவின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.