இரு புதிய சேவா வனிதா யோகட் திட்ட கட்டிடங்கள் திறந்து வைப்பு மற்றும் சேவா வனிதா நலன்புரி விற்பனை நிலைமொன்றுக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு கிழக்கு கடற்படைக் கட்டளையில் இடம்பெற்றது

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவியின் கருத்துப்படி கடற்படை ஊழியர்களுக்கு வழங்கப்படும் நலன்புரி சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா மற்றும் விதுர நிருவனங்களில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு புதிய சேவா வனிதா யோகட் திட்ட கட்டிடங்கள் திறந்து வைப்பு மற்றும் வலகம்பா நிருவனத்தில் சேவா வனிதா நலன்புரி விற்பனை நிலைமொன்றுக்காக அடிக்கல் நாட்டுதல், 2021 ஜனவரி 24 ஆம் திகதி கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சந்திமா உலுகேதென்ன தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா மற்றும் விதுர நிறுவன வளாகங்களில் இடம்பெற்றது.

கடற்படைக்குள் கடற்படை சேவா வனிதா பிரிவின் யோகட் தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த இரு புதிய சேவா வனிதா யோகட் திட்ட கட்டிடங்கள் இவ்வாரு 2021 ஜனவரி 24 ஆம் திகதி கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சந்திமா உலுகேதென்னவினால் இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா மற்றும் விதுர நிறுவன வளாகங்களில் திறந்து வைக்கப்பட்டன. மேலும், வலகம்பா நிருவன வளாகத்தில் நடத்தப்பட்ட மத சடங்களுக்குப் பிறகு சேவா வனிதா நலன்புரி விற்பனை நிலைமொன்றுக்காகவும் அடிக்கல் நட்டப்பட்டன. இந்நிகழ்வை குறிக்கும் வகையில், கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா நிருவன வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்ட யோகட் திட்டக் கட்டடங்களுக்கு அருகே மா மரக்கன்றொன்று நட்டார்.

நாட்டில் தற்போதுள்ள சுகாதார மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்ட இந்த திட்டங்களுக்காக கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா, கடற்படை சேவா வனிதா பிரிவின் செயற்குழு உறுப்பினர் திருமதி திலினி பெரேரா, திருகோணமலை வடக்கு கடற்படை கட்டளை அதிகாரி, திருகோணமலை, தெற்கு கடற்படை கட்டளை அதிகாரி, இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா மற்றும் விதுர நிருவனங்களில் கட்டளை அதிகாரிகள் மற்றும் சேவா வனிதா உறுப்பினர்கள், மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் உள்ளிட்ட குறைந்த எண்ணிக்கையிலான மாலுமிகள் கலந்து கொண்டனர்.


වළගම්බා ආයතනයේ සුභසාධක වෙලඳසැලක් සඳහා මුල්ගල තැබීම


වළගම්බා ආයතනයේ අභිනවයෙන් ඉදිකළ සේවා වනිතා යෝගට් ව්‍යාපෘති ගොඩනැගිල්ල විවෘත කිරීම


විදුර ආයතනයේ අභිනවයෙන් ඉදිකළ සේවා වනිතා යෝගට් ව්‍යාපෘති ගොඩනැගිල්ල විවෘත කිරීම