சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடற்படை சேவா வனிதா பிரிவினால் பிரமாண்டமான நிகழ்ச்சியொன்று ஏற்பாடுசெய்யப்பட்டது

மார்ச் 08 ஆம் திகதி ஈடுபடுகின்ற சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படையின் சேவா வனிதா பிரிவினால் மகளிர் தின கொண்டாட்டத் திட்டமொன்று பாதுகாப்பு அமைச்சு சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ரானி குணரத்னவின் தலைமையில் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்னவின் மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பங்களிப்பில் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க கேட்போர்கூட்டத்தில் 2021 மார்ச் 08 ஆம் திகதி பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியர் பிரணீத் அபயசுந்தர, மூத்த மனநல மருத்துவர் மற்றும் உளவியலாளர் திருமதி அமா திசானநாயக்க, சிரேஷ்ட சமையல்காரர் தேசபந்து டி. பபிலிஸ் சில்வா, ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட கைவினைஞர் திருமதி ஜி.டபிள்யூ ஸ்வர்ணா ஜெயந்தி, மூத்த பத்திரிகையாளர் திருமதி ரசாதரி பீரிஸ், சிரேஷ்ட அழகு நிபுணர் திருமதி சுனீதா கொதலாவல ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், மகளிர் தின கொண்டாட்டங்களகைகு இணையாக, சேவா வனிதா பிரிவின் தலைவியின் கருத்தின் படி நிர்மாணிக்கப்பட்ட 'சிந்துலிய' பத்திரிகையின் முதல் பதிப்பை கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சந்திமா உலுகேதென்ன அவர்களால் பாதுகாப்பு அமைச்சு சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ரானி குணரத்ன அவர்களுக்கு மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்ற பிரதம விருந்தினர் உட்பட வளங்களை பங்களித்த சிறப்பு விருந்தினர்களுக்கு சேவா வனிதா பிரிவின் தலைவி நினைவு சின்னங்களை வழங்கினார்.

மேலும், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ‘தேசத்தின் செழிப்புக்கு பெண்கள் பங்களிப்பு’ என்ற தலைப்பில் தெரன 24 இல் ஒரு நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியும் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் திருமதி வசந்தா ஹெட்டியராச்சி இலங்கை கடற்படை கப்பல் சயுரலயில் இருந்து நடத்தினார். இந்த நிகழ்வுக்காக கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிங்கள ஆய்வுத் துறையில் பேராசிரியர் அகலகட சிரி சுமன தேரர், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியர் பிரணீத் அபயசுந்தர, பேராசிரியர் அட்டநாயக்க எம். ஹேரத், ருஹுன பல்கலைக்கழகதில் வெளி விரிவுரையாளர், உளவியல் ஆலோசகர், திருமதி சந்தியா அமரசிங்க, சர்வதேச மகளிர் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவி திருமதி நிரோஷி நந்தசிறி மற்றும் உளவியலாளர், அறுவை சிகிச்சை கேப்டன் துஷானி அப்சரா ஹெனெகம ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் மற்றும் கடற்படைத் தளபதி உள்ளிட்ட மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன, கொடி அதிகாரிகள், உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள், மாலுமிகள் கலந்து கொண்டனர்.