கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவை

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் மற்றொரு சமூக பொறுப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக, 02 கடற்படை வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி பொருட்கள் வழங்கும் நிகழ்வொன்று கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் 2021 மார்ச் 22 அன்று கடற்படை தலைமையகத்தில் உள்ள சேவா வனிதா பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றது.

இங்கு, கடற்படையில் பணியாற்றும் கடற்படை வீரர் டி.பி.ஆர்.எஸ் தஸநாயக்கவின் எஸ்.சி 45150 மூன்று இரட்டையர்களுக்கு மற்றும் கடற்படை வீரர் (ஓய்வு) ஜே.எல்.டி.எச்.கே. பெரேராவின் வி.ஏ 59028 இரண்டு மகள்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் மார்ச் 22 அன்று சேவா வனிதா பிரிவின் தலைவியால் நன்கொடையாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சேவா வனிதா பிரிவின் நிர்வாகக் குழு உறுப்பினர்களான திருமதி அயோனி வேவிட, திருமதி மாலா லமாஹேவா மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.