கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவை

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்தின் படி பயங்கரவாத நடவடிக்கைகள் காரணத்தினால் ஊனமுற்ற கடற்படையினர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கடற்படை வீரர் (ஊனமுற்ற) ஈ.ஜி.எஸ்.ஆர் முனவீர எக்ஸ்.பீ 8976 வுக்காக ஒரு வீடு கட்டுவதற்கு கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவியின் தலைமையில் சிரேஷ்ட அழகு கலைஞர் தனஞ்சய பண்டாராவின் தாய் திருமதி ரத்னா விஜேசிங்கவினால் 2021 ஏப்ரல் 12 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது.

கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் தொழிலாளர் உதவியுடன் மற்றும் சிரேஷ்ட அழகு கலைஞர் தனஞ்சய பண்டாரவின் நிதி உதவியுடன் இந்த வீடு கட்டப்பட்டு வருகிறது. இந் நிகழ்வுக்காக சேவா வனிதா பிரிவின் மூத்த மேற்பார்வை அதிகாரி கொமடோர் யூ.எஸ் செனவிரத்ன, சேவா வனிதா பிரிவின் பணியாளர்கள், கடற்படை சிவில் பொறியியல் துறையின் கடற்படையினர் மற்றும் காலாட்படை (ஊனமுற்ற) இ.ஜி.எஸ்.ஆர் முனவீரவின் குடும்ப உறுப்பினர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.