கடற்படை நாய் பிரிவுக்கான அவசர சிகிச்சை பிரிவு இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிறுவனத்தில் திறந்து வைக்கப்பட்டன

கடற்படை சேவா வனிதா பிரிவின் ஆதரவின் கீழ் கெமுனு நிறுவன வளாகத்தில் கட்டப்பட்ட கடற்படை நாய் பிரிவுக்கான புதிய அவசர சிகிச்சை பிரிவு (Emergency Treatment Unit), கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவினால் 2021 ஏப்ரல் 23 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கடற்படை நாய் பிரிவின் திறமைகளை வெளிப்படுத்தும் அழகிய அணிவகுப்பொன்றும் நடைபெற்றதுடன் இந் நிகழ்வுக்காக துணைப் தலைமை அதிகாரி மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன, சேவா வனிதா பிரிவின் செயற்குழு உறுப்பினர் திருமதி அயோனி வேவிட, கொடி அதிகாரிகள், சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள், சேவா வனிதா பிரிவு உறுப்பினர்கள் மற்றும் சேவா வனிதா பிரிவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.