கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவை

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவியின் கருத்துப் படி கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவையாக கடற்படையில் பணியாற்றி வரும் கடற்படை வீரர் ஜே.பி.எஸ். சஞ்சீவ இ.டி 33240 யின் வேண்டுகோளின் பேரில் அருடைய நோயுற்ற தந்தைக்கு சக்கர நாற்காலியொன்றை வழங்குதல் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் பணியாற்றும் போது திடீரென இறந்த கடற்படை வீரர் பி.வை.எஸ் சுமனசிறி எஸ்.டபிள்யூ 30189 வின் மனைவியின் வேண்டுகோளின் பேரில் அவர்களது மூன்று குழந்தைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக ஒரு மடிக்கணினியை வழங்குதல் இன்று (2021 மே 12) கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் கடற்படை தலையைகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்காக சேவா வனிதா பிரிவின் நிர்வாகக் குழு உறுப்பினர் திருமதி அயோனி வேவிட, சேவா வனிதா பிரிவின் சிரேஷ்ட மேற்பார்வை அலுவலர் கமடோர் யு.எஸ். செனவிரத்ன இயக்குநர் கொமடோர் பல் சேவைகள் மருத்துவ கமடோர் ஆர்.பி.என்.என் விஜெதோரு, கட்டளை மருத்துவ அதிகாரி (மே) மருத்துவ கொமாண்டர் எம்.வி.எஸ். அதுகோரல, சேவா வனிதா பிரிவின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.