கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவை

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவியின் கருத்துப் படி கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவையாக கடற்படையில் பணியாற்றி வரும் கடற்படை வீரர் ஜே.பி.எஸ். சஞ்சீவ இ.டி 33240 யின் வேண்டுகோளின் பேரில் அருடைய நோயுற்ற தந்தைக்கு சக்கர நாற்காலியொன்றை வழங்குதல் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் பணியாற்றும் போது திடீரென இறந்த கடற்படை வீரர் பி.வை.எஸ் சுமனசிறி எஸ்.டபிள்யூ 30189 வின் மனைவியின் வேண்டுகோளின் பேரில் அவர்களது மூன்று குழந்தைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக ஒரு மடிக்கணினியை வழங்குதல் இன்று (2021 மே 12) கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் கடற்படை தலையைகத்தில் நடைபெற்றது.

12 May 2021

முல்லேரியாவ கிழக்கு கொழும்பு அடிப்படை வைத்தியசாலைக்கு கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் நன்கொடையாக படுக்கைகள் வழங்கப்பட்டது

இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவியின் கருத்துப்படி, சேவா வனிதா பிரிவின் நிதியால் முல்லேரியாவ கிழக்கு கொழும்பு அடிப்படை வைத்தியசாலையின் சிறப்பு மகப்பேறு பிரிவில் கோவிட் -19 நோய்த்தொற்றுடைய தாய்மார்களுக்கு சிகிச்சையளிப்பதுக்காக HDU/ICU (High Dependency Unit / Intensive Care Unit) வகையில் 03 படுக்கைகள், இன்று (12 மே 2021) கிழக்கு கொழும்பு அடிப்படை வைத்தியசாலையின் இயக்குநர் டாக்டர் பிரியந்த கருணாரத்னவுக்கு, சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சந்திமா உலுகேதென்னவினால் கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

12 May 2021

காப்பகங்கள்