கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய இரத்த தான நிகழ்வு அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி நடத்தப்பட்டது

தற்போதுள்ள கொவிட் 19 தொற்றுநோய் காரணத்தினால் நன்கொடையாளர்களுக்கு இரத்த தானம் செய்வது கடினமானது. இக் காரணத்தினால் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளிலும், தேசிய இரத்த வங்கியிலும் உள்ள இரத்த இருப்புகள் குறைந்துவிட்டன. இதன் விளைவாக, இரத்த வங்கி மற்றும் அபேக்ஷா வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் இருந்து இரத்த தானம் செய்யுமாரு கோரிக்கைகள் வந்துள்ளது.

எனவே, வெசக் போய தினத்தை முன்னிட்டு சேவா வனிதா பிரிவின் தலைவியின் வழிகாட்டுதலின் கீழ் சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் இரத்த வங்கியுடன் இணைந்து “இரத்த தான திட்டமொன்று” 2021 மே 24 ஆம் திகதி மேற்கு, வட மத்திய, வட மேற்கு, வடக்கு, தென் கிழக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளில் 0900 மணி முதல் 1800 மணி வரை நடத்த சேவா வனிதா பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் 1611 கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக திசானநாயக்க ஆடிட்டோரியத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வருகையுடன் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்காக சேவா வனிதா பிரிவின் சிரேஷ்ட மேற்பார்வை அதிகாரி கொமடோர் யு.எஸ். சேனவிரத்ன, மேற்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் பீ.எஸ் த சில்வா, இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் எச் ஐ.ஏ. குணவர்தன, மேற்கு கட்டள மருந்துவ அதிகாரி கொமான்டர் எம்.வீ.எஸ் அதுகோரல உட்பட சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள், சேவா வனிதா பிரிவின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



மேற்கு கடற்படை கட்டளை



வட மத்திய கடற்படை கட்டளை



வடமேற்கு கடற்படை கட்டளை


தென்கிழக்கு கடற்படை கட்டளை



வடக்கு கடற்படை கட்டளை



தெற்கு கடற்படை கட்டளை