ஜினானந்த குழந்தைகள் மேம்பாட்டு மையத்திற்கு கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் நன்கொடையாக உலர் உணவுகள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சந்திமா உலுகேதென்னவின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் இன்று (2021மே 25) ஸ்ரீ சுகத விஹாரயவில் உள்ள ஸ்ரீ ஜினானந்த குழந்தைகள் மேம்பாட்டு மையத்தில் வசிக்கும் தேரர்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கும் நிகழ்வொன்று ஸ்ரீ சுகத விஹார வளாகத்தில் நடைபெற்றது.

இந்த திட்டம் கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவையாக செயல்படுத்தப்பட்டதுடன் வெல்லவத்த ஸ்ரீ சுகத விஹாரையின் தலைமை தேரர் விஹாராதிபதி புனித உருமுத்தே சுகதானந்த தேரரின் வேண்டுகோளின் பேரில், ஸ்ரீ சுகத விஹாரயவில் உள்ள ஸ்ரீ ஜினானந்த குழந்தைகள் மேம்பாட்டு மையத்தில் வசிக்கும் 03 தேரர்களுக்கு மற்றும் 70 குழந்தைகளுக்கு இந்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் சேவா வனிதா பிரிவின் நிர்வாகக் குழு உறுப்பினர் திருமதி ஷியாமா சில்வா, சேவா வனிதா பிரிவின் சிரேஷ்ட மேற்பார்வை அலுவலர் கமடோர் யு.எஸ். செனவிரத்ன, சேவா வனிதா உறுப்பினர் திருமதி பிரியங்கா செனவிரத்ன, இயக்குநர் கொமடோர் பல் சேவைகள் மருத்துவ கமடோர் ஆர்.பி.என்.என் விஜெதோரு, கட்டளை மருத்துவ அதிகாரி (மே) மருத்துவ கொமாண்டர் எம்.வி.எஸ். அதுகோரல, சேவா வனிதா உறுப்பினர் அப்சரா ஜயகொடி மற்றும் சேவா வனிதா பிரிவின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.