மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் நன்கொடையாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது

இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் குழந்தைகள் மற்றும் பிற நோயாளிகளின் நலனுக்காக சுகாதார பொருட்கள், மின் உபகரணங்கள் மற்றும் Medical Oxygen Cylinder நன்கொடையாக வழங்களும் நிகழ்வு சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சந்திமா உலுகேதென்ன தலைமையில் இன்று (2021 மே 25) அபேக்ஷா வைத்தியசாலை வழாகத்தில் நடைபெற்றது.

இந்த திட்டம் கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவையாக செயல்படுத்தப்பட்டதுடன் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் வார்டு எண் 17 இரத்த புற்றுநோய் வார்டில் ரத்தக்கசிவு புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் தேவிந்த ஜெயதிலகவின் வேண்டுகோளின் பேரில், அந்த வார்டின் பயன்பாட்டிற்கு தேவையான 50 படுக்கை துணிகள், 25 தலையணைகள், 05 மேசை துணிகள், 02 மின்விசிறிகள் மற்றும் 32 அங்குல வண்ண தொலைக்காட்சியொன்று இவ்வாரு நன்கொடையாக வழங்கப்பட்டன. மேலும் குறித்த மருத்துவமனையின் இலக்கம் 15-C குழந்தை புற்றுநோய் வார்டில் புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சஞ்சீவ குணசேகர அவர்களின் வேண்டுகோளின் பேரில், அந்த வார்டில் சிகிச்சை பெறும் குழந்தைகளின் நலனுக்காக 02 Medical Oxygen Cylinder கள் (44 Ltr) நன்கொடையாக வழங்கப்பட்டன. இந் நிகழ்வு அபேக்ஷா வைத்தியசாலை வளாகத்தில் சேவா வனிதா பிரிவின் தலைவியின் தலைமையில் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வுக்காக அபேக்ஷா மருத்துவமனையில் பிற மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், சேவா வனிதா பிரிவின் நிர்வாகக் குழு உறுப்பினர் திருமதி ஷியாமா சில்வா, சேவா வனிதா பிரிவின் சிரேஷ்ட மேற்பார்வை அலுவலர் கமடோர் யு.எஸ். செனவிரத்ன, சேவா வனிதா உறுப்பினர் திருமதி பிரியங்கா செனவிரத்ன, இயக்குநர் கொமடோர் பல் சேவைகள் மருத்துவ கமடோர் ஆர்.பி.என்.என் விஜெதோரு, கட்டளை மருத்துவ அதிகாரி (மே) மருத்துவ கொமாண்டர் எம்.வி.எஸ். அதுகோரல மற்றும் சேவா வனிதா பிரிவின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.