EVENT NEWS 2026

CARAT - 2026 பயிற்சி கிழக்குக் கடற்பகுதியில் Sea Phase கட்டத்தை எட்டுகிறது

31 Jul 2026

இலங்கை கடற்படைக்கும் அமெரிக்க கடற்படைக்கும் இடையிலான இருதரப்பு CARAT (Cooperation Afloat Readiness and Training) - 2026 கடற்படைப் பயிற்சி, கிழக்குக் கடற்பகுதியில் Sea Phase கட்டத்தை எட்டியுள்ளது.

2026 ஜூலை 27 ஆம் திகதி முதல் 30 வரையிலான இக் கட்டத்தில், இருநாட்டு கடற்படைகளுக்கும் இடையே செயல்பாட்டுத் தயார்நிலை, தொழில்முறைத் திறன்கள் மற்றும் பரஸ்பர ஒருங்கிணைப்பை (Interoperability) மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு துறைகளை உள்ளடக்கி (Subject Matter Expert Exchanges - SMEEs) திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதன் கீழ் சைபர் பாதுகாப்பு, மருத்துவச் செயல்பாடுகள், சுழியோடல் மற்றும் மீட்புப் பணிகள், கப்பல்களுக்குள் நுழைந்து சோதனையிடுதல் மற்றும் கைப்பற்றுதல் (Visit, Board, Search and Seizure - VBSS), வெடிபொருட்களை செயலிழக்கச் செய்யும் பணிகள் (Explosive Ordnance Disposal - EOD) மற்றும் கடல்சார் எல்லை விழிப்புணர்வு (Maritime Domain Awareness - MDA) குறித்த பயிற்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இப்பயிற்சிக்கு சிறப்பம்சமாக, நச்சுப் பாம்புகளை அடையாளம் காண்பது மற்றும் அவற்றை பாதுகாப்பாகக் கையாள்வது தொடர்பான அறிவைப் பகிர்ந்துகொள்வதற்காக பாம்பு கையாளும் செய்முறை விளக்கத் திட்டம் (Snake Handling Demonstration) ஒன்றும் நடத்தப்பட்டது. இதன் மூலம் நச்சுப் பாம்புகளை அடையாளம் காண்பது, பாதுகாப்பாகக் கையாள்வது மற்றும் அதுபோன்ற ஆபத்தான சூழ்நிலைகளுக்கு சரியாகப் பதிலளிப்பது தொடர்பான நடைமுறை அறிவையும் திறன்களையும் பங்கேற்பாளர்களிடையே மேம்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.

CARAT - 2026 பயிற்சியின் முக்கிய அங்கமான கடல்சார் கட்டம், சாதாரண கப்பல் அணிவகுப்புப் பயிற்சிகளுக்கு அப்பாற்பட்டு, உயர்மட்ட போர்த்தந்திர நடவடிக்கைகள் மற்றும் பலதரப்பட்ட கடல்சார் நடவடிக்கைப் பயிற்சிகளை உள்ளடக்கிய வகையில் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இருநாட்டு கடற்படைகளின் கூட்டுச் செயல்பாட்டுத் திறன்களை மேலும் மேம்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இந்த பயிற்சி நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை, கடற்படை மரைன் படைப்பிரிவு, கடற்படை காலாட்படைப் பிரிவு, இலங்கை விமானப்படை மற்றும் அமெரிக்க மரைன் படைப்பிரிவு ஆகியன இணைந்து பங்கேற்றுள்ளன.

Accessibility Tools