EVENT NEWS 2026

CARAT - 2026 இருதரப்பு கூட்டுப் பயிற்சி சம்பூரில் தொடங்கியது

27 Jul 2026

2026 ஆம் ஆண்டிற்காக அமெரிக்க கடற்படையின் பசிபிக் கடற்படைப் பிரிவு மற்றும் இலங்கை கடற்படை இணைந்து, கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் நடத்தும் Cooperation Afloat Readiness and Training 2026 (CARAT- 26) இருதரப்பு கூட்டுப் பயிற்சி இன்றைய தினம் (2026 ஜூலை 27) துணைத் தலைமை அதிகாரியும் கிழக்கு கடற்படைப் கட்டளையின் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே அவர்களின் தலைமையில் சம்பூரில் தொடங்கியது.

CARAT–2026 இருதரப்பு கூட்டுப் பயிற்சி 2026 ஜூலை 27 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்போது, Snake handling demonstration, OPSO Syn, Cyber security, Dive and Salvage, VBSS, EOD, MDA, Medical SMEE, DIVTACS, RASAPP & SKBDL, LIVE FIREEX & CRAA, CASEVAC, SAR, PHOTOEX, Boarding, VBSS & HVBSS ஆகிய பிரிவுகளின் கீழ் கோட்பாட்டு மற்றும் செய்முறைப் பயிற்சிகளை இலங்கை கடற்படையின் மரைன் படைப்பிரிவு, கடற்படை காலாட்படைப் பிரிவு, இலங்கை விமானப்படை மற்றும் அமெரிக்க மரைன் படைப்பிரிவு ஆகியன இணைந்து மேற்கொள்ளவுள்ளன.

மேலும், இந்நிகழ்வில் சீனக்குடா விமானப்படை அகாடமியின் பீடாதிபதி எயார் வைஸ் மார்ஷல் அமல் பெரேரா, கடற்படைப் போர்க்கப்பல் கட்டளையின் பதில் கொடி அதிகாரி கமோடோர் தனேஷ் பத்பேரிய, மரைன் பணிப்பாளர் கமோடோர் சஞ்ஜீவ கொடிகார மற்றும் அமெரிக்க கடற்படையின் Deputy Commander, Expeditionary Strike Group SEVEN / Amphibious Force, SEVENTH Fleet / Task Force 76 கெப்டன் Michael J. Messenger உள்ளிட்ட இருநாடுகளின் இராணுவப் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Accessibility Tools