EVENT NEWS 2026

கடற்படைத் தளபதி ருவன்வெலி மஹா சாய மற்றும் ஜய ஸ்ரீ மஹா போதி ஆகிய புண்ணிய ஸ்தலங்களை தரிசித்தார்

12 Jul 2026

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இலங்கை கடற்படையின் 27-வது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றதன் பின்னர், 2026 ஜூலை 12 அன்று அனுராதபுரத்தின் புண்ணிய ஸ்தலங்களை தரிசித்து, கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவ தலைவி திருமதி கௌசல்யா ஓபாத பெர்னாண்டோ அவர்களும் கலந்துகொண்டார்.

இதற்கமைய, கடற்படை தளபதி ருவன்வெலி மகா சாய மற்றும் அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதி ஆகியவற்றுக்கு பௌத்த மத வழிபாடுகளை மேற்கொண்டு பக்திப் பெருக்குடன் வழிபட்ட பின்னர், ருவன்வெலி சைத்தியாராமாதிகாரியும், பதில் அட்டமஸ்தானாதிபதியும், ஸ்ரீ லங்கா ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தரும், மகா விகார சங்க சபையின் கௌரவ செயலாளரும், மகா விகார மகா பிரிவெனா அதிகாரியுமான சாஸ்திரபதி ராஜகீய பண்டித அதிபூஜ்ய ஈதல்வெடுனுவெவே ஞானதிலக்க நாயக்க தேரரைச் சந்தித்து, வணங்கி பிரிகர வழங்கி, கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைவதற்காக ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார்.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குப் பங்களிப்பு செய்வதுடன், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும் எதிர்கால சந்ததியினருக்காக மத ஸ்தலங்களைப் பாதுகாப்பதற்கும் கடற்படை ஆற்றிவரும் மகத்தான பங்களிப்பைப் பாராட்டிய அட்டமஸ்தானாதிபதி நாயக்க தேரர் உள்ளிட்ட மதிப்பிற்குரிய மஹா சங்கத்தினர், கடற்படையின் அந்தப் பணியை எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்குப் பங்களிப்பு வழங்குமாறு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவிற்கு அறிவுரை வழங்கினர். அத்துடன், அதற்காக ஜய ஸ்ரீ மஹா போதியின் ஆசீர்வாதமும் முப்பொருள் துணையும் பாதுகாப்பும் கடற்படைத் தளபதி உட்பட அனைத்து கடற்படை வீரர்களுக்கும் எப்போதும் கிடைக்கப் பெற வேண்டுமென ஆசி பிரார்த்தித்தனர்.

மேலும், இந்நிகழ்வில் வடமத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் இந்திக டி சில்வா உட்பட கடற்படைத் தலைமையகம் மற்றும் வடமத்திய கடற்படை கட்டளையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட கடற்படை வீரர்கள் கலந்துகொண்டிருந்தனர்

Accessibility Tools