கடற்படை தாதியர் கல்லூரியில் தாதியர் பயிற்சியை நிறைவு செய்த 16 தாதிய மாணவர்கள் தாதியர் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, வெலிசர இலங்கை கடற்படைக் கப்பலான தக்ஷிலா நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள கடற்படை தாதியர் கல்லூரியில் தாதியர் பயிற்சியை நிறைவு செய்த கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 16 தாதிய மாணவர்களின் தொப்பி அணிவித்தல் மற்றும் சேவைக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்வு, இன்று (2026 நவம்பர் 12) கடற்படை பிரதிப் பிரதானி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தலைமையில், கடற்படை கொழும்பு பிரிவிலுள்ள அட்மிரல் சோமதிலக்க திசாநாயக்க கேட்போர் கூடத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அதற்கமைய, இந்த நிகழ்வின் போது கடற்படையைச் சேர்ந்த ஏழு (07) தாதிய மாணவர்களுக்கும் நான்கு (04) தாதிய மாணவிகளுக்கும், விமானப்படையைச் சேர்ந்த மூன்று (03) தாதிய மாணவர்களுக்கும் இரண்டு (02) தாதிய மாணவிகளுக்கும் தொப்பி அணிவித்தல் மற்றும் நைட்டிங்கேல் விளக்குகளை வழங்கும் நிகழ்வு, சுகாதார அமைச்சின் தாதியர் பணிப்பாளர் (மருத்துவ சேவைகள்) திருமதி எம்பிசி சமன்மலி உள்ளிட்ட சுகாதார அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்த கௌரவ விருந்தினர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
மேலும், இந்த நிகழ்வில் கடற்படைத் தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார விஞ்ஞான பீடாதிபதி, சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படையினர், அத்துடன் தாதியர் பயிற்சியை நிறைவு செய்த கடற்படை மற்றும் விமானப்படை தாதிய மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.













