EVENT NEWS 2026

கிழக்கு கடற்படை கட்டளை வீரர்களுக்கான போர்க்கள அனுபவப் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டம்

10 Sep 2026

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படைப் வீரர்களின் தொழில்சார் அறிவு, செயற்பாட்டுப் புரிதலை மற்றும் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஒழுங்கமைக்கப்பட்ட, போர்க்கள அனுபவப் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டம், 2026 செப்டம்பர் 09 ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

மனிதாபிமான நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்குப் பங்களிப்புச் செய்த கடற்படையில் தற்போது சேவையிலுள்ள சிரேஷ்ட அதிகாரிகளின் போர் அனுபவங்கள், தொழில்சார் அறிவு, உபாயத்தந்திர நோக்கு மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆகியவற்றைத் தற்கால இளம் அதிகாரிகளுக்கும் கடற்படையினருக்கும் வழங்கி அவர்களது தொழில்சார் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், கடற்படை கப்பற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் தனேஷ் பத்பேரியவின் எண்ணக்கருவுக்கு இணங்க ஒழுங்கமைக்கப்பட்ட இத்திட்டத்திற்காக, கடற்படையின் பிரதிப் பிரதம அதிகாரியும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகேமகே, கடற்படை கப்பற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் தனேஷ் பத்பேரிய மற்றும் இலங்கை கடற்படை கப்பலான கஜபாகு கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் அரோஷ ஜயதுங்க ஆகிய சிரேஷ்ட அதிகாரிகள் வளவாளர்களாகப் பங்களிப்புச் செய்தனர்.

இதன்போது, மனிதநேய நடவடிக்கை இடம்பெற்ற காலப்பகுதியில் நிலவிய சவாலான செயற்பாட்டுச் சூழல் நிலைமைகளுக்கு மத்தியில் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தல், தைரியத்தையும் உறுதியையும் தொடர்ச்சியாகப் பேணிப் பராமரித்தல், சரியான முடிவுகளை எடுத்தல், சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளுதல் மற்றும் தொழில்சார் தன்மையைப் பாதுகாத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட பெறுமதியான போர் அனுபவங்கள், குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட கடற்படைப் வீரர்களுக்கு சிரேஷ்ட அதிகாரிகளின் அனுபவங்களின் அடிப்படையில் விளக்கமளிக்கப்பட்டன.

Accessibility Tools